முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி காலமானார்!

jaipal reddy - 2026

மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்பால் ரெட்டி, தமது 77 ஆவது வயதில் காலமானார்.  உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ஜெய்பால் ரெட்டி, சனிக்கிழமை நேற்று நள்ளிரவு1.28 மணிக்கு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு இரு தெலுகு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்ததுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். நாட்டிற்கு ஜெயபால் ரெட்டி ஆற்றிய சேவைகள் மறக்க இயலாதவை என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜெய்பால் ரெட்டி மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார். ஜெய்பால் ரெட்டி மனிதாபிமானம் உள்ளவர் என்று அவர் புகழ்ந்தார்.

அரசியல் வட்டாரத்தில் மூத்த தலைவராக பெயர் பெற்ற ஜெய்பால் ரெட்டி நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஐந்து முறை எம்பியாகவும் இருந்தவர்.  உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 20-ஆம் தேதி ‘கச்பௌலி’ ஏஷியன் gastroenterology மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1980 இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஜெய்பால் ரெட்டி.

அரசியலில் அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி.  அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1998ல் சிறந்த பார்லிமென்டேரியனாக தேர்வு பெற்றவர் ஜெய்பால் ரெட்டி.

1969 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் முறை மகபூப் நகர் கல்வகுர்த்தி தொகுதியில் நின்று வென்றவர், பின்னர் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி 1977இல் ஜனதா கட்சியில் இணைந்தார். 1980இல் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.

1984இல் மெகபூப் நகர் மக்களவைத் தேர்தலில் வென்றார். அதன்பின் 1998 1999, 2004, 2009 தேர்தல்களில் மக்களவைக்குத் தேர்வானார்.

ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் மன்மோகன் சிங் அமைச்சரவையில் கலாச்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் ஜெய்பால் ரெட்டி.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories