December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே – முஸ்லிம் தையற்காரரிடம் பெரியவா!

“நான் சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி!”–ஒரு முஸ்லிம் தையற்காரரிடம் -பெரியவா

(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.37543075 2066516280060193 7397113717386641408 n 4 - 2025

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல், சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.

அவரோ திருச்சியில் இருந்தார். பெரியவாளோ ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.எங்கே சந்திப்பது?

அத்துடன் ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளைத் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ, மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி மலைக்கோட்டையில் முகாம்!

“நான், டெய்லர், சட்டை, கோட்டு எல்லாம் நல்லா தைப்பேன். சாமிக்கு சட்டை – கோட்டு தெச்சுக் கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்-கிட்டிருக்கிறேன். சாமி அளவு கொடுத்தால்- பழைய சட்டைகூடப் போதும் – நாளைக்கே புது சட்டை கொண்டாந்துடுவேன் .கோட்டு தைக்க, ரெண்டு மூணுநாள் ஆகும்…..”

பெரியவாள்,பரிவுடன், அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய ஆசைப்படுகிறார் என்பது, பக்தி பூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.

“நான்சட்டை கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே, தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை மேலே அலங்காரமாகப் போடுகிற மாதிரி, பெரிய துப்பட்டா – நெறைய வேலைப்பாடுகளோட செய்து கொடு…”

டெய்லருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பெரியவாள் அவரை மதித்து,பொருட்படுத்தி, அவர் காணிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்)

ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாள்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின் அளவுக்கேற்ப – இரண்டு பக்கங்களிலும் நன்றாகத் தொங்கும்படி வண்ணவண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

அதைப் பிரித்து காட்டச் சொல்லி, நுணுக்கமாக பார்த்துவிட்டு,கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

“பட்டையன் (யானைப் பாகன்) கிட்டே கொடுத்து இன்னிக்கே போடச் சொல்லு….”

பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத் தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories