காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தற்காலிக 370வது பிரிவு திரும்பப் பெறப் பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் பிராந்தியமும் காஷ்மீர், லடாக் என இரண்டாகப் பிரிக்கப் பட்டு, யூனியன் டெரிடரி அந்தஸ்து பெறவுள்ளது.
இதில், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் டெரிடரி பகுதியாக மாற்றப் படவுள்ளது. இங்கு புத்த மதத்தினர் அதிகம் பேர் என்பதால், இந்தியாவில் முதல் பகுதியாக லடாக் அறியப் படுகிறது. தற்போது, இந்தியாவில் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு யூனியன் டெரிடரியாக லடாக் திகழும்.
இதனை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு, வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது…
லடாக் கடைசியாக இப்போது ஒரு யூனியன் பிரதேசம் ஆகப் போகிறது. சுமார் 70 சதவீதம் பௌத்த மதப் பிரிவினர் வசிக்கும் லடாக் இந்தியாவின் முதல் பௌத்த பெரும்பான்மை மாநிலப் பகுதியாக மாறவுள்ளது. லடாக்கின் தோற்றமும், இந்தியாவின் உள்சீரமைப்பும் அந்நாட்டின் உள்விவகாரங்கள். நான் லடாக்குக்கு சென்றிருக்கிறேன். பார்த்துவர வேண்டிய இடம்… என்று பதிவிட்டுள்ளார் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க..!
I understand Ladakh will finally become a Union Territory. With over 70% Buddhist it will be the first Indian state with a Buddhist majority. The creation of Ladakh and the consequential restructuring are India’s internal matters. I have visited Ladakh and it is worth a visit.
— Ranil Wickremesinghe (@RW_UNP) August 6, 2019
இதனிடையே, லடாக் பகுதியில் இதனை ஒரு சுதந்திர தினமாக எண்ணி, அப்பகுதியினர் ஆடிப் பாடிக் கொண்டாடி வருகின்றனர்.
#Ladakh to become Union territory without legislature; people celebrate in Leh Main Bazaar pic.twitter.com/dTWxYtHcDB
— Doordarshan News (@DDNewsLive) August 6, 2019




