தேவர் மகன் படம் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சிவாஜி, கமல், கவுதமி, ரேவதி, நாசர் நடித்திருந்தார்கள். பரதன் இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
கமல் தான் நடித்த சில படங்களின் 2ம் பாகத்தை மீண்டும் தயாரிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். விஸ்வரூபம் 2ம் பாகத்தை தயாரித்து விட்டார். அடுத்த இந்தியன் 2வில் நடிக்கிறார். அந்த வரிசையில் தேவர் மகன் 2ம் பாகத்தையும் தயாரித்து நடிப்பதாக செய்திகள் வந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் இதுபற்றி குறிபிட்டார். அவர் கூறியதாவது: தேவர்மகன் படத்தை ரீமேக் செய்து அதில் சிவாஜி நடித்த வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதேபோல மருதநாயகம் படத்தை எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் நடித்த, ‘நாளை நமதே’ படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது அந்த படத்தின் தலைப்பு உரிமத்தை மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார்.
தேவர் மகன் படத்தில் சிவாஜி ஊர் பெரியவர். அவரது மகன் அமெரிக்காவில் படித்து விட்டு வருவார். மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப நினைக்கிறவர் மனதை மாற்றி சொந்த ஊரிலேயே இருக்க வைப்பார். சிவாஜி இறந்ததும் அவர் இடத்துக்கு கமல் வருவார். சொந்த பகை மோதலில் கமல், மாயனை (நாசர்) கொன்று விட்டு.
தன் மக்களிடம் “இந்த அருவா வெட்டு குத்து வேணாம்பா. பிள்ளைகளை படிக்க வையுங்க” என்று சொல்லிவிட்டு ஜெயிலுக்கு போவதோடு படம் முடியும்.
2ம் பாகத்தில் வயதான தோற்றதில் சிறையில் இருந்து திரும்பி வருவார் கமல், ரேவதி மகன் இளைஞனாக இருப்பார். தற்போதுள்ள பிரச்சினைகளில் அப்பாவும், மகனும் எப்படி பிரச்னைகளை கையாளுகிறார்கள் என்பது மாதிரியான கதையாக இருக்கும் என்கிறார்கள்.



