சென்னை : கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்சி அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜயதாரணி. குஷ்பு, கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட விஷயத்தில் அவரின் கருத்து இதுவாக இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கௌரவிக்கவும், தக்க வைக்கவும் கட்சிப் பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரம் சினிமா பிரபலங்களால்தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு. காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. இருக்கும் செல்வாக்கை தட்டி எழுப்பும் திறமை இருக்க வேண்டும். காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும். உதாரணமாக நான் உள்பட பலருக்கு கட்சிப் பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி. ஆனால் கட்சிப் பணி செய்வதற்காக எந்தப் பதவியும் வழங்கியதில்லை. தமிழகத்தில் காங்கிரசை முன்னணிக் கட்சியாக மீண்டும் கொண்டு வர முடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்…. என்றார் அவர்.
பல ஆண்டுகள் உழைத்தவர்க்கும் கட்சி அங்கீகாரம் தர வேண்டும்: குஷ்பு நியமனத்தில் விஜயதாரணி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari