ஹீத்ரு விமானநிலையத்தின் பொறுப்பற்ற பதில்! சௌந்தர்யா ரஜினி

சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள்
sowntharya 1 - 2026

ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் லண்டன் சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் அவர்கள் காத்திருந்தபோது அவர்களது கை பை திருட்டு போனது. அதில் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது.

இது குறித்து அவர்கள் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். தூதராக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவர்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட் வழங்கினர்.

இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:கடந்த 1-ம் தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர்.

இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது. அதில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும், அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது? என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது. இவ்வாறு சவுந்தர்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.