தர்பார் 2வது லுக் போஸ்டர் வெளியீடு!

கிசுகிசு சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
darbar - 2026

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் 2-வது லுக் போஸ்டர் வெளியீடு: தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

ரஜினிகாந்த் ஆக்ரோஷமான முக பாவத்துடன் காட்சி தரும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் போலீஸ் கெட்டப்பில் களம் இறங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்.

வரும் 2020 ஜனவரியில், தைப் பொங்கல் திருநாளில் திரைக்கு வருகிறது தர்பார் திரைப்படம். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது! தர்பார் படப்பிடிப்பின் போது எடுக்கப் படும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் ஆக்ரோஷமாகத் தோன்றும் முகபாவத்துடன் காட்சி தருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.