கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் கரிபீயன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் நெவிஸ் பெட்டரியாட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெவிஸ் பெட்டரியாட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.
இந்த அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 62 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.



