கட்டற்ற பொய்கள்… கழகக் கண்மணிகளின் ‘கடமை கண்ணியம் தட்டுப்பாடு’!

Published:

rajanews1 - 2026

சென்னை: திருச்சி நகைக்கடை கொள்ளையன் எனக்கு மாலை அணிவிப்பது போல் போட்டோ மார்பிங் செய்து சமூகவலை தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை காவல் துறை ஆணையரிடம் ஹெச்.ராஜா புகார் அளித்துள்ளார்.

லலிதா ஜூவல்லரி திருச்சி கிளையில் சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை அள்ளிச் சென்றனர். பிடிபட்ட கொள்ளையர் மூவரில் ஒருவரான மணிகண்டன், பாஜக., தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை மறுத்துள்ள எச்.ராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில்… மாலை அணிவிக்கும் போட்டோவில் இருப்பது நான் அல்ல. திவாகரனுக்கு சால்வை அணிவிக்கும் போட்டோவை, எனக்கு அணிவிப்பது போல் மார்பிங் செய்து பரப்பிவிட்டுள்ளனர். காங்., கட்சியை சேர்ந்த ஆர்.கே.நகர் சயீத் என்பவரால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை, திமுக தகவல் தொடர்பு பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனை திமுக எம்.எல்.ஏ., ராஜா ரீடுவிட் செய்துள்ளார்… என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:

காங்கிரஸின்ஆர்.கே.நகர் சயீத் என்பவர் திவாகரனுக்கு சால்வை அணிவிக்கும் படத்தை மார்பிங் செய்து எனக்கு சால்வை அணிவிப்பதாக தனது timelineல் போட்டுள்ளதை DMK4TN தனது ட்விட்டரில் லலிதா ஜுவல்லரில் திருடியவன் பாஜக நிர்வாகி என்று பதிந்துள்ளது.அதை TRB.Raja retweet செய்துள்ளது கண்டிக்கத்தக்கது

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

சென்னை மாநகர் ஆணையர் வசம் சயீத் ஆர்.கே.நகர், DMK4TN, TRB.Rsja, வெளிச்சம் சமூக வளைதளம் ஆகியவற்றிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் பாஜக.,வை சேர்ந்தவர் என போலி தகவல் பரப்பியதாக திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா மீது பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘’மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நபர் பாஜகவை சேர்ந்தவன் என்ற தவறான தகவலை தன் ட்விட்டரில் பதிவிட்டார். பாஜக மீது அவதூறு பேசி, பாஜக தான் இதை செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தார். பொது வெளியில் இந்த மோசடியை பரப்பி பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்தார். இதனையடுத்து காவல் துறை விசாரணையை திசை திருப்ப நடக்கும் முயற்சியோ என்ற அடிப்படையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தேன்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இது குறித்து முகநூல் மற்றும் இதர சமூக ஊடகங்களில் உரிய ஆவணங்களோடு பதிவிட்டிருந்தேன். இந்த நிலையில், டி.ஆர்.பி.ராஜா தன் பதிவை நீக்கியுள்ளார். தன் தவறை உணர்ந்து இதை நீக்கியிருந்தாலும், தெரிந்தே தான் இந்த தவறை செய்திருக்கிறார். உள்நோக்கத்தோடு இந்த பதிவை அவர் செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. பதிவை நீக்கிய காரணத்தால் அவர் செய்த குற்றத்தை மறைக்க முடியாது. காவல் துறை அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இது குறித்து ஆவன செய்வதாக காவல் துறை உயரதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். வழக்கம் போல், இந்த புகாரையும் கிடப்பில் போட மாட்டார்கள் என எண்ணுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக தன் பொறுப்பை உணராமல், ஆணவப் போக்கோடு அவர் செய்திருந்த பதிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தண்டிக்கத்தக்கது. உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே இனி வருங்காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் தவறாமல் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வழிவகுக்கும்.

இப்படி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், தி மு கவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு செய்திருப்பது நியாயமா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்ப வேண்டியது அவசியம். தவறான செய்தியை பதிவிட்டு பதட்டத்தை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் மீது தி மு க நடவடிக்கை எடுக்குமா என்பதை ஊடகங்கள் கேட்குமா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

எதற்காக தளிக்கோட்டை ராசுதேவர் பாலு. ராஜா (அதாவது டி.ஆர். பி. ராஜா) இப்படி ஒரு பதிவைச் செய்தார். பின்னர் ஏன் அந்தப் பதிவை நீக்கினார் என்பதை அவர் விளக்க வேண்டும். இதற்கு அவர் மு.க.ஸ்டாலின் கேட்பது போல் வெள்ளை அறிக்கையோ, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்வது போல் பச்சை அறிக்கையோ வெளியிட வேண்டும்… என்று சமூகத் தளங்களில் வலியுறுத்துகின்றனர்.

திருவாரூரில் திருடன் பிடிபட்டதால், திருவாரூர் திருடனை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்காகப் பிடித்திருந்தால், தமிழ்நாட்டையே காப்பாத்தி இருக்கலாமே என்று சிலர் சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தார்கள். அதற்கு பழிவாங்கும் விதத்தில், திமுக.,வினர் இவ்வாறு பாஜக., மீது அவதூறு பரப்பி, வழக்கம் போல் குளிர்காய நினைத்தார்கள் என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img