ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ன ஷாம்பூ பயன்படுத்துறாங்க..?: இமாமின் கேள்வி!

isis terror - 2026

இமாம் ஆஃப் பீஸ் – அமைதியின் இமாம் போட்டுள்ள ஒரு கருத்து… ஆமா… ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ன ஷாம்பு பயன்படுத்துறாங்க…? ஹெட்ஸ் ஆஃப் ஷோல்டர்ஸ்..

மேற்குலக நாடுகளில் பிரபலமானவர் இமாம் ஆஃப் பீஸ் என்ற பெயருடன் உலாவரும் இமாம் தவ்ஹிதி. ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கையால் பாதிக்கப் பட்டவராக தன் கருத்துகளை வெளிப்படுத்துவார். அவ்வப்போது கேலி கிண்டல் செய்வதும் வழக்கம்.

இவரது டிவிட்டர் பக்கத்தில் இவர் செய்திருக்கும் ஒரு பதிவில்தான் இவ்வாறு கேள்வி எழுப்பி கேலி செய்திருக்கிறார்.

https://twitter.com/Imamofpeace/status/1182993386292334592

இவரது டிவிட்டர் பதிவுக்கு சிலர் கேலி செய்து பதில் அளித்திருக்கின்றனர். அவற்றில் சில…

அவர்கள் அதை சொர்க்கத்தில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று ஒருவர் கருத்திட்டிருக்கிறார்.

அதுவா… அது எஞ்சின் ஆயில் என்கிறார் ஒருவர்.

உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம் என்று கூறுகிறார் ஒருவர்.

அது 72 கன்னிகளால் தயாரிக்கப் பட்டு சுவனத்தில் இருந்து இறக்குமதி ஆகிறது என்று பதிலளித்திருக்கிறார் ஒருவர்.

அய்யோ… அது ஒட்டக்கத்தின் சிறுநீர். ஷாம்பு அல்ல என ஒருவரின் பதில்…