
பிரதமர் மோடி மீண்டும் வரலாறு படைக்க தமிழகம் வருவார் என்று குறிப்பிட்டு தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ்., மகன் ஓ.பி.ரவீந்திரநாத்.
மோடி வேட்டி கட்டிய தமிழனின் அடையாளத்தை வெளிப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியுடன் கருத்துப் பதிவு செய்துள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத்.
முன்னதாக, மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, மாமல்லபுரத்திற்கு சிறப்பான வருகை தரும் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்களையும், நட்பு நாடான சீனத்தின் மாண்புமிகு அதிபர் ஜி ஜின் பிங் அவர்களையும், அஇஅதிமுக வின் கழக மக்களவைத் தலைவர் என்ற முறையிலும் அன்னைத்தமிழின் இனிமையுடனும், வருக!வருக! என வணங்கி வாழ்த்தி வரவேற்கிறேன்! – என்று பதிவிட்டிருந்தார்.
எளிமையாய் தனது பாணியிலேயே தமிழ் மண்ணில் தடம் பதித்த நமது பாரத பிரதமருக்கு கோடான கோடி வணக்கங்கள் ???? அன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் எளிய உடை மாற்றம், இன்று பிதாவின் பாதையிலே பிரதமரின் இனிய எழில்தோற்றம். வரலாறு படைக்கும் தமிழர் தோற்றத்தினை வாழ்த்தி வரவேற்கிறேன். #TNWelcomesModi
பிரதமர் மோடி மாமல்லபுரம் பகுதியில் கடற்கரையில் காலை நேர நடைப்பயிற்சியின் போது கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணியில் இருந்த வீடியோ பதிவைப் பகிர்ந்த ஓபி ரவீந்திரநாத்,
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” எனும் பொன்மனம் படைத்த பிரதமரின் பொற்கரங்களால் கங்கை மட்டுமல்ல ! வங்கக்கடற்கரையும் தூய்மை ஆனது !! பாரே வியக்கும் பாரதப்பிரதமரின் செயல்களைப் போற்றி வணங்குகிறேன்???? @narendramodi @PMOIndia – என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் மண்ணில் தன்னிகரற்ற ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும் நீங்கள் மக்கள் மனதில் தடம் பதித்து செல்கிறீர்கள்,மண்ணின் புகழை உணர்ந்து அந்த மண்ணிற்கு ஏற்ப தன்னை அடையாளப் படுத்தி, எங்களை கவர்ந்த நீங்கள் மீண்டும் வரலாறு படைக்க தமிழகம் வருவீர்கள் என்று நம்பிக்கையோடு நான்.
@narendramodi – என்று டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் அதிமுக., மக்களவை உறுப்பினரும், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,ஸின் மகனுமான ஒ.பி.ரவீந்திரநாத்
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
- சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?
- BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!
- திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!
- விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

