
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனையொட்டி இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்களே பணம் விநியோகித்தவர்களை பிடித்து வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



