குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam falls sep26 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று காலை போலீசார் அனுமதி அளித்தனர்

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தென்காசி குற்றாலம் செங்கோட்டை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

இதையடுத்து குற்றால அருவிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு நேற்று மாலை தடைவிதிக்கப்பட்டது

தொடர்ந்து மழை குறைந்து அருவிகளில் நீர்வரத்து குறைந்தது இன்றுகாலை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்

இதனிடையே பழைய குற்றாலத்தில் முளைக்கும் திடீர் மசாஜ் சென்டர்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும் நீர் நிலை மாசுபடாமல் இருக்கவும் சமூக ஆர்வலர்களாலும் நீதிமன்றத்தாலும் எண்ணை தேய்த்து குளிப்பதையும் சோப்பு சாம்புகளை பயன்படுத்துவதையும் தடை செய்து இருக்கிறது …

இந்நிலையில் தற்போது பழைய குற்றாலம் பகுதிகளில் ஏராளமான ஆயில் மசாஜ் சென்டர்கள் உருவாகியுள்ளது குறித்து சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.