spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பகீரதப் பிரயத்தனம் என்ன தெரியுமா?

பகீரதப் பிரயத்தனம் என்ன தெரியுமா?

- Advertisement -

இராமரின் முன்னோரான ரகுவின் வம்சத்தில் சகரன் என்ற நேர்மையான மன்னன் ஆண்டு வந்தார். இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு அஜமஞ்சன் என்ற. அறிவற்ற முரடனான மகன் இருந்தான். இரண்டாம் மனைவிக்கு அறுபதினாயிரம் புதல்வர்கள் பிறந்தனர். சகரன் அஸ்வமேதயாகம் செய்ய, அதைப் பிடிக்காத இந்திரன், யாகக்குதிரையை கவர்ந்துச் சென்று, பாதாளலோகத்தில் தவம் செய்துக் கொண்டிருந்த முனிவரான கபிலரின் முன் கட்டி வைத்தான்.

யாகக்குதிரையைக் காணாதச் சகரபுத்திரர்கள் குதிரையைத் தேடி பூவுலகெங்கும் அலைந்தனர். பூமியெங்கும். பிளந்து பாதாளத்திலும் தேடினர். ( இவர்கள் தோண்டிய இடங்களில் எல்லாம் கடல்நீர்0 புகுந்தது; எனவே கடலுக்குச் #சாகரம் என்ற பெயர் வந்தது.) கபில முனிவரின் முன் குதிரை நிற்பதைக் கண்டு, அவரே திருடியதாகக் கோபப்பட, கபில முனிவர் அவர்களை எரித்துச் சாம்பலாக்கினார். (முனிவரின் சாபத்தால் சகர மன்னனின் அறுபதாயிரம் குழந்தைகளும் சாம்பலாகிக் கிடந்த இடமே வங்காளத்திலுள்ள இன்றைய கோல்கத்தா என்கின்றனர்.) .

அஜமஞ்சனின் மகன் அம்சுமான் மகா புத்திசாலி. மாவீரனான இவன் குதிரையைக் கபில முனிவரின் முன் கண்டு, வணங்கிக் குதிரையைப் பெற்று சென்றான். தேவலோகக் கங்கையைப் பூமிக்கு வரவைத்து, இச்சாம்பலைக் கரைத்தால், இவர்கள் நற்கதியடைவர்! என்றார் கபில முனிவர். சகரன் யாகத்தைச் சிறப்புற முடித்தான்; ஆனால் அவர்கள் யாராலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர இயலவில்லை.

சகரனின் பேரன் அம்சுமானுக்குத் திலீபன் பிறந்தான். மாவீரனான திலீபனாலும் கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டு வர இயலவில்லை. பூவுலகம் செய்த பெரும் பேறாக வையகம் தழைக்க ஒரு மாவீரன் திலீபனுக்குப் பிறந்தான். அவனே #பகீரதன்; இவன் இயல்பிலேயே விடாமுயற்சியும், கொண்ட கொள்கையில் உறுதியும் உடையவன். சாபத்தால் மடிந்து சாம்பலான தன் மூதாதையர்கள் அஸ்தியைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதியை உண்டாக்கித் தர விரும்பிய பகீரதன், நாட்டை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிரம்மாவைக் குறித்து, ஒற்றைக் காலில் நின்று பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டான்.

பகீரதனது தவத்தை மெச்சி பிரம்மா தோன்றவே, அவரிடம், விஷ்ணு பாதத்தில் பணி புரியும் கங்கா மாதவை, பூமியைக் குளிரச் செய்வும், தன் மூதாதையரின் அஸ்தியைக் கரைக்கவும் அருள்பாலிக்கும்படி வரம் கேட்டான் பகீரதன்; பிரம்மாவும். வரமளித்தார். ஆனால் விண்ணுலகக் கங்கை மண்ணுலகில் இறங்கும்போது, அதன் வேகத்தைத் தாங்க வல்லவர் சிவபெருமான் மட்டுமே; எனவே அவரை நோக்கித் தவம் செய் என்றார் பிரம்மா.


சிவனாரைக் குறித்துத் தன் தவத்தைத் தொடங்கினான் பகீரதன். சிவபெருமானும், அவனுக்குக் காட்சியளித்து, கங்கையைத் தாங்கி, மண்ணுலகில் விடுவதாக வரமளித்தார். அவ்வாறே அவர் தன் ஜடாமுடியை விரித்துப் போட்டபடி நிற்க, இச்சிவனையும் தள்ளிவிட்டு பாய்வேன்! என ஆணவத்தோடு வேகமாகப் பாய்ந்தாள் கங்கை. எனவே கோபம் கொண்ட பரமசிவனார், கங்கையைத் தன் ஜடாமுடியிலேயே அடக்கிவிட்டார். இதனால் கலங்கிய பரதன், சிவனாரை வேண்ட, மனமிரங்கிய சிவனாரும், கங்கையின் வேகத்தைத் தடுத்து, பூவுலகில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட. #பிந்துசரஸ் என்ற தடாகத்தில் விட்டார்.


சிவனார் கங்கையைத் தலையில் தரித்தமையால், கங்கையையும் சிவ பத்தினி என்று சிலர் தவறாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் கங்கை சிவனாரின் மனைவியல்ல! மனைவியாக இருந்திருந்தால் மானுட வடிவில், பாண்டவர்களின் முன்னோரான சந்தனு மன்னரை மணந்திருக்க மாட்டார். புனிதமான கங்கையைத் தலையில் தாங்கியதாலேயே. சிவபெருமானுக்குக்
#கங்காதரன் என்ற பெயரும் உண்டு.


விஷ்ணு பாதத்தில் இருந்து புறப்பட்ட கங்கை, முதலில் #நந்தபிராயக் என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் #ருத்ரப்ராயகை என்றும் பெயர் பெற்று , பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் #பாகீரதி எனவும் பெயர் பெற்றாள். வழியில் ஜன்னு முனிவரின் ஆசிரமத்தை கங்கை அழித்துவிட, முனிவர் கங்கைநீரைக் குடித்துவிட்டார். பகீரதன் மன்னிப்புகேட்கவும், மனமிரங்கிய முனிவர் கங்கையை தன் காதின் வழியாக வெளியே விட்டாராம். இதனால் #கங்கை, ஜன்னு முனிவரின் மகளானாள் என்ற பொருளில் கங்கையை. #ஜானவி. எனவும் அழைப்பர்.


பகீரதனிடம் கங்காதேவி, “தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும்,
எந்த மார்க்கமாகத் தன் தாரைகள் ஓட வேண்டும்?” என்றும் கேட்டாள். பகீரதன் தன் தேரில் ஏறி, ‘தாயே! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட, கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். கங்கை அவன் பின்னே வரவில்லை. இரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். அப்போதும் கங்கை வரவில்லை. எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான்.


சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். காரணம், அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. அந்த இடம் தான் இன்று ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன.
கங்கை ஏழாகப் பிரிந்து, மீண்டும் இணைந்த நிலையை இன்றும் நாம் காணலாம்.

சப்த ரிஷிகளுக்கான ஆலயமும் ஹரித்வாரில் உள்ளது. சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும் போது, அவர்களையும் தரிசித்து, வணங்கிச் சென்றான் பகீரதன. இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும்போது, யமுனையையும் சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கா.


இன்றைய பீகாரின் மத்தியப் பகுதியைத் தாண்டும் போது, கங்கா தேவி தன் ஓட்டத்தைத் திருப்பி மீண்டும் இமயத்தை நோக்கி வடக்கு திசையாக ஓட ஆரம்பித்தாள். இதனால் இங்கே கங்கை உத்தரவாகினி என்ற பெயர் பெற்றாள். ஆடி மாதத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இன்றும் சுல்தான்கஞ்ச் என்ற இடத்திலிருந்து காவடிகளில் கங்கையைச். சுமந்து சுமார் 110 கி.மீட்டர் கால்நடையாகச் சென்று, தேவ்கர் வைத்திய நாதர் ஆலயத்திலுள்ள ஜோதிர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.


பகீரதனின் விருப்பப்படி மீண்டும் தென்கிழக்குத் திசையில் ஓடி,
வங்கக் கடலில் சங்கமமானாள் புனித கங்கை . பகீரதனின் மூதாதையர்களின் அஸ்தியை கரைத்து, அவர்களுக்கு மோட்சம் கிடைக்கச் செய்தாள் புனித நதியாம் கங்கை. பகீரதனும், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்துப் பெரும் புகழ் பெற்றான். விடாமுயற்சியின் மறுபெயரே” பகீரதப் பிரயத்தனம்” என அன்று முதல் உலகோர் கூறலாயினர். இராமரின் முன்னோனான பகீரதனால் பாரதம் செழிக்க வந்த புனிதமான நதியே கங்காதேவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe