உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து ஐசிசி சிறந்த அணி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஒரு இந்திய வீரர்கூட இடம்பெறவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதையடுத்து ஐசிசி, உலகக் கோப்பை அணி ஒன்றை பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் அறிவித்துள்ளது இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. இந்த அணியில், மார்டின் கப்தில், பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன், டேனியல் வெட்டோரி, மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மோர்னி மோர்கெல், பிரெண்டன் டெய்லர் (12-வது வீரர்). ஆகியோர் உள்ளனர். இந்த அணியை தேர்வு செய்த ஐசிசி குழு, “இதுதான் ஒரு சமநிலையான அணி, இந்த அணி எந்த அணியையும் வீழ்த்தக் கூடியதாகும்.” என்று கூறியுள்ளது. மேலும், தனது ஆக்ரோஷமான, புதுவகை மற்றும் உத்வேகத் தலைமைத்துவத்தினால் 44 நாட்கள் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை இறுதிக்கு அழைத்து வந்த மெக்கலம் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வீரர்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் மஹமுதுல்லா, யு.ஏ.இ.யின் ஷைமன் அன்வர், உமேஷ் யாதவ், ஷமி, வஹாப் ரியாஸ், இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் இந்த அணிதான் நல்ல சமநிலை அணி என்று கூறப்பட்டுள்ளது.
ஐசிசி சிறந்த உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர் ஒருவரும் இல்லை !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari