சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, சிதம்பரம் தீட்சிதர்கள் அளித்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு, துண்டு போர்த்திக் கொண்டு, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து, அதே கையுடன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி, ஹிந்து மத எதிர்ப்பு விஷக் கருத்துகளை மேடையில் முழங்கி, சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யும் ஆகி விட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ. திருமாவளவன் தற்போது, பேசியிருக்கும் கருத்துகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய தொல்.திருமாவளவன், அசிங்கமாக பொம்மைகள் இருந்தால் அது கோயில் என்று தெரிந்து கொள்ளலாம் என அசிங்கமாகப் பேசி, கோடிக்கணக்கான இந்து உணர்வுள்ள மக்களை சீண்டிப் பார்த்ததுடன், மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்திப் பேசியிருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன், கோயில்களை கொச்சைப் படுத்தியிருப்பதன் மூலம், தமிழர் கட்டடக் கலையை, தமிழர் வாழ்வியலை, தமிழர்களின் தெய்வ வணக்கத்தை கேலி செய்து பேசியிருக்கிறார் என்று உள்ளம் குமுறுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.
இது குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையங்களில் கொடுக்கப் பட்டு வருகின்றன. இந்து முன்னணி அமைப்பு பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களை அளித்துள்ளது.
இதுபோல இன்று மட்டும் சுமார் 200 காவல் நிலையங்களில் #திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், இவ்வாறு பேசுவது திருமாவளவனுக்கு ஒன்றும் புதிதில்லை! வழக்கமாக அவர் பேசியிருக்கிறார். வழக்கமாக இந்து முன்னணி புகார்கள் கொடுத்திருக்கிறது. வழக்கமாக இந்த மனுக்களை சாய்ஸில் விட்டுவிட்டு போலீஸார் வழக்கம் போல் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள்.
எனவே இது போன்று பேசுபவர்கள் மேலும் மேலும் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக நன்றாகப் பராமரிக்கப் பட்டுவருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் பேட்டி அளித்துவிட்டுப் போவார்கள்… என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கின்றனர் உணர்வுள்ள இந்துக்கள்.
பகுத்தறிவு விளையாட்டு:
மிசா கைது பொய்யாம்!
முரசொலி இடம் பஞ்சமி நிலமாம்!
தப்பிக்க வழியென்ன?
திருமா கூப்பிடு…
இந்து மதத்தை இழிவாக பேசிய வீடியோ பதிவை பரப்பு திருமா! ஸ்டாலினை மறந்து விடுவார்கள் மக்கள்!!!
திருமாவிற்கு பத்து கோடி!