காசிமேடு பகுதியில்; வலை பின்னும் இடத்தில் பயங்கர தீ: துரித நடவடிக்கையால், பெட்ரோல் பங்க் தப்பியது சென்னை, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பகுதியில், வலைபின்னும் இடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. போலீசார், பொதுமக்களின் துரித நடவடிக்கையால், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், அருகில் இருந்த பெட்ரோல் பங்க் தப்பியது: சென்னை, காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில், வலை பின்னும் இடம் உள்ளது. இதனையொட்டி பின்புறம் பெட்ரோல் பங்க் உள்ளது. வலைபின்னும் இடத்தில், பிளாஸ்டிக், காகிதங்களின் கழிவுகள் இருந்தன. அந்த கழிவுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில், அங்கு வந்த போலீசார் செல்வம், ராஜலிங்கம், தங்கராஜ் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன், தண்ணீர் லாரியை மடக்கி, துரித நடவடிக்கை எடுத்து, தீயை குறித்த நேரத்தில் அணைத்தனர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, பெட்ரோல் பங்கும் தப்பியது. இதற்கிடையில், அந்த பெட்ரோல் பங்கில், தீ அணைக்கும் சிலிண்டரை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், அந்த சிலிண்டரில் தீயை அணைக்கும் ஆக்சிஜன் இல்லையாம். பங்கில், ஆக்சிஜன் இல்லாத. தீ அணைப்பான் சிலிண்டர் இருப்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இராயபுரம் செய்தியாளர் இ.முகமது முஸ்தபா
Popular Categories



