நாங்க ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள்லாம் செத்துருங்க! இல்லீன்னா..: ‘கோட்டிக்காரப் பய’ சீமான்!

Published:

seeman - 2026

எங்கள் மீதா வழக்கு? ஆட்சிக்கு வந்தால் கொன்றுவிடுவேன் என்று எல்லோரையும் எச்சரித்துள்ளார் சித்தப்பிரமை பிடித்துள்ள சீமான்!

நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் தாம் ஆட்சிக்கு வருவதற்குள் செத்துப் போய் விடுமாறும் சீமான் எச்சரித்துள்ளார்.

அப்படி அவர்களாக சாகவில்லை என்றால், அவர்களை கொன்று விடுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்று நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய சீமான், தங்கள் மீது வழக்கு போடுபவர்கள், தங்கள் போஸ்டர்களை கிழிப்பவர்களுடைய பெயர்ப்பட்டியலை தாம் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறினார்.

seeman e1538589747761 - 2026

வன்முறைக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதும் அகிம்சைதான். வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான் என்றும் சீமான் கூறினார்.

என் நலம் விரும்பிகள் ஏதாவது ஒரு புதுவிதமான யுக்தியை யோசித்து மேலே வந்து காட்டுங்கள் என்று கூறுகின்றனர். இதனை அடுத்து, வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடித்தால் வீட்டுக்கு ஒரு கார் வழங்கப் போகிறேன். வென்ற பிறகு மக்கள் வீடுகளுக்கு எல்லாம் சென்று ஒருவர் புகைப் படத்தை தருவேன். அது வேறு யாருமல்ல அம்பேத்கார் என கூறி அவர் பாணியிலேயே புஹ்ஹு உஹ்ஹூக்ஹூ என்று சிரித்தார் சீமான்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அவரின் பேச்சுக்கு கைத்தட்டும் தம்பிகளுக்கு சீமானின் பேச்சு ஒரு கற்பனைக் கதையை எடுக்கும் சினிமா இயக்குனரின் சினிமாப்படம் போன்ற பொய் என்றும் வீண் சவடால் எனவும் தெரிவதில்லை! அவர்களும் ஏதோ மயக்கத்தில் கைத்தட்டி வைக்க… அந்தக் கைத்தட்டுக்கு மயங்கி பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் கூறி வருகிறார் சீமான்.

நெல்லைச் சீமையில் கூறும் வழக்கில், எங்க வூட்டு திரனைல ஒக்காந்து நாங்கள்லாம் அப்டித்தாம்ல பேசுவோம்.. சரியான கோட்டிப் பய…இந்தப் பயலுக்கு கோட்டி பிடிச்சிட்டு… பல பயலுவள கோட்டி பிடிச்சி அலைய வைக்கப் போறான் கரி மூதி. இந்த வெளங்காத பய வெட்டிப் பேச்ச கேக்குறதுக்கு இத்தனை வெங்குப் பயலுவளா … என்று கேட்கின்றனர் சமூகத் தளங்களில்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img