ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டி ?

Published:

;text-indent:0px;text-transform:none;white-space:pre-wrap;word-spacing:0px;background-color:rgb(255,255,255);text-decoration-style:initial;text-decoration-color:initial;display:inline;float:none”>

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில், குறுகிய காலத்திற்குள், மூன்றாவது முறை தேர்தல் நடக்கிறது. இம்முறை, அ.தி.மு.க., மூன்று பிரிவுகளாக சிதறியுள்ளது. மேலும், இரட்டை இலை யாருக்கு என்பது, இன்னும் முடிவாகவில்லை. அதனால், சுயேச்சை சின்னங்களில், அவர்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அத்துடன், ஓட்டு வித்தியாசமும் குறையும். அது, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும். இதுதவிர, அங்கு கணிசமான அளவில் நாடார் சமுதாய மக்கள் வசிப்பதால், தமிழிசை போட்டியிவார் என, தெரிகிறது. 

இருப்பினும், கடந்த முறை போட்டியிட்ட எம்.என்.ராஜா, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜமீலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம். ஓரிரு நாளில், கட்சி உயர்மட்ட குழு கூடி, இதுபற்றி அறிவிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |