செங்கல்பட்டு பெருமாள்மலையில் கிறிஸ்துவ ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரும் போராட்டம்

Published:

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அழகுசமுத்திரம் கிராமத்தில், பெருமாள்மலை குன்றில் உள்ள கிறிஸ்துவர்களின்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது.

செங்கல்பட்டு அடுத்த, அழகுசமுத்திரம் கிராமத்தில்,
மலைக்குன்று உள்ளது. இங்கு, சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மலையை
ஆக்கிரமித்து, சிலுவைகள் மற்றும் சிலைகளை வைத்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை
அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம், மலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

அதில்,
ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றாமல் விட்டனர்.
அவற்றை அகற்றக் கோரி, கிராம மக்கள், அதே பகுதியில், உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆதரவாக, பா.ஜ., –
ம.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் பகுதியில் கிறிஸ்துவர்கள் மலைகளில் சிலுவைகளை நட்டு, சர்ச்சுகளைக் கட்டி வருகின்றனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் மலை இதே வகையில் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரம்பரியமாக வழிபடப்படும் கோயில் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப் பட்டு வருவதால், எந்நேரமும் மத மோதல்கள் ஏற்படக் கூடிய அபாயம் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img