October 12, 2024, 9:05 AM
27.1 C
Chennai

நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி… மெரினாவில் தர்னா! பாஜக., தலைவர்கள் கைது!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கூட்டிய கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சோலியை இஸ்லாமியர்கள் முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன், இன்னமும் முடிக்கவில்லை, ஏன் முடிக்காமல் இருக்கிறீர்கள் என்று கூறி, நாட்டின் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யுமாறு அவர்களைத் தூண்டிவிட்டுப் பேசினார்.

இதை அடுத்து நெல்லை கண்ணனுக்கு எதிராக பாஜக.,வினர் பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர். பல இடங்களில் புகார் மனுக்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் தர்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக பாஜக., தலைவர்கள் அறிவித்தனர்.

இதன்படி இன்று மாலை நெல்லை கண்ணனைக் கைது செய்ய வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் பாஜக.,வினர் கூடினர். அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்ததது.

தொடர்ந்து, நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.

ALSO READ:  செங்கோட்டை பகுதியில் கிருஷ்ண ஜயந்தி விழா!