spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தர்பார் - DARBAR - நோ ஏஜ் பார் ...

தர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …

- Advertisement -

மணா , கஜினி , துப்பாக்கி என மாஸ் ஹிட்ஸ் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கு மேல் மாஸ் ஹிட்ஸை கையில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணைந்திருக்கும் படம் தர்பார் .

இரண்டு கமர்ஸியல் ஜாம்பவான்கள் இணைந்ததால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை . அதை நிறைவேற்றினார்களா ? அலசலாம் …

மும்பையில் கேங்க்ஸ்டகளை தொடர்ந்து  என்கவுன்டர் செய்கிறார் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் ( ரஜினி ) . அவர் ஏன் டில்லியிலிருந்து மும்பைக்கு வந்தார் ? அவரின் வெறித்தனத்துக்கு என்ன காரணம் ?

அவரின் ஒரே மகள் வள்ளிக்கு ( நிவேதா தாமஸ் ) நடந்தது என்ன ? வேர்ல்ட் கேங்க் லீடர் ஹரி சோப்ராவை ( சுனில் ஷெட்டி ) அவர் அழித்தாரா ? என எல்லா கேள்விகளுக்கும் விடையை முதல்பாதியில் எக்ஸ்பிரஸ் வேகத்திலும் , இரண்டாம் பாதியில் பேசஞ்சர் வேகத்திலும் சொல்லியிருப்பதே தர்பார் …

70 வயதிலும் அதே வேகம் , அதே ஸ்டைல் , அதே குறும்பு என படம் முழுவதும் ரஜினி சும்மா கிழித்திருக்கிறார் . நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வருபவர்களுக்கு ” கண்ணா இங்கே பார் ” என்று தனக்கு ரிட்டையர்மெண்ட் இல்லையென நிரூபித்திருக்கிறார் . 

யோகி பாபுவின் நக்கல்களுக்கு ” இரு உன்னை வச்சுக்கிறேன் ” என வித்தியாசமான மாடுலேஷன்களில் சொல்வதெல்லாம் சூப்பருக்கு மட்டுமே கை வந்த கலை.ஆக்சன் அதிரடிகளை  தாண்டி மகளுக்காக அவர் உருகும் காட்சிகள் படத்தின் ஹைலைட் .

இப்படியே போச்சுன்னா மனுஷன் 2026 க்கு கூட அரசியலுக்கு வருவது அதிசியம் தான் போல ?! …

நயன்தாராவுக்கு கஜினி யிலாவது தனியாக ஒரு அயிட்டம் சாங்க்  இருந்தது . ஆனால் இதில் யோகி பாபு அளவுக்கு கூட அவருக்கு சீன்கள் இல்லாதது நயன் பேரவை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே !

இமாலய சூப்பர் ஸ்டாருக்கு முன்னாலும் தன் உருக்கமான நடிப்பால் கவர வைக்கிறார் நிவேதா தாமஸ் . ஐ.சி.யு வில் படுத்திருக்கும் அப்பாவுக்கு அருகில் கட்டிக்கொண்டு படுக்கும் காட்சி கல் மனதையும் கரைய வைத்துவிடும் …

முதல் பாதியில் சீரியசான என்கவுன்டர்களுக்கு மத்தியில்  தன் கவுண்டர்களால் நன்றாகவே  கிச்சு கிச்சு மூட்டுகிறார் யோகி பாபு . இடைவேளைக்கு பின்னரும் இவரை  யூஸ் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது .

மெய்ன் வில்லன் சுனில் ஷெட்டி ஆரம்பத்தில் கவனிக்க வைத்து பின் வழக்கம் போல ஹீரோ கையால் அடி வாங்கி சாகிறார் . 

அனிருத் அருணாச்சலம் பட பிஜிஎம் மை  புது பாணியில் போட்டு மிரட்டுகிறார் . மற்றபடி ” சும்மா கிழி ” பாடல் தவிர அவர் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன…

சூப்பர் ஸ்டார் படம் , பொங்கல் விடுமுறை , ஹீரோ – இயக்குனர் இருவருக்குமே முந்தைய  படங்களின் வெற்றி இவையெல்லாமே படத்தின் கமர்ஸியல் சக்ஸசுக்கு  பெரிய கை கொடுக்கும் . ரஜினி இந்த வயதிலும் ஃப்ரெஸ்ஸாக , துடிப்பாக  இருக்கிறார் ஆனால் அதே போல கதையும் , திரைக்கதையும் இல்லாதது துரதிருஷ்டமே .

மாஸ் ஹீரோ  படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் . அதுக்காக இப்படியா ? ரஜினி நிஜத்தில் தான் சூப்பர் ஸ்டார் ஆனால் கதைப்படி அவர் கமிஷனர் தானே தவிர கடவுள் இல்லையென்பதை இயக்குனர் ஏனோ மறந்து விட்டார் .

இரண்டாம் பாதியை ஹீரோ – வில்லன் விளையாட்டாக சுவாரசியமாக கொண்டு செல்லாமல் வெறும் சென்டிமென்டை மட்டும் நம்பியது சறுக்கல் …
ரஜினி – நயன் உறவுக்குள்ளான குழப்பம் , க்ளைமேக்சில் துப்பாக்கியை தூக்கிப்போட்டு விட்டு சவடால் பேசி அடி வாங்கும் வில்லனின் டெம்ப்லேட் காட்சிகள் , ஹீரோ தான் ஜெயிப்பான் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதில் எந்தவிதமான சேலஞ்சும் இல்லாமல் போகும் ஃப்ளாட்டான ஸ்க்ரீன்ப்ளே , கபாலி , பேட்ட என்று ரஜினியின் சமீபத்திய படங்களையே நினைவுபடுத்தும் சீன்கள் இவையெல்லாம் தாறுமாறாக இருந்திருக்க வேண்டிய தர்பாரை தடம் மாற்றுகின்றன …

ரத்தம் , சதை , நாடி நரம்பெல்லாம் ரஜினி வெறி ஊறிப்போன ரசிகர்களுக்கும்  , பொங்கலுக்கு குடும்பத்தோட ஏதோ ஒரு படத்துக்கு போனும் என்று நினைப்பவர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் . ஹீரோவையும் தாண்டி படமே நல்ல அனுபவமாக இருக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு
( பாட்சா , படையப்பா )  ரஜினியே படத்தில்  ” எம்ஜிஆர் ஏன் மூணு தடவ அடி  வாங்குறார் தெரியுமா ” என்று சொல்வது போல ” நாம ரஜினிக்காக மூணு அடிக்கு மேலயே வாங்குறோமோ ?! என்றே தோன்றும்

ஆனால் ” நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர் ” என்று டயலாக் மட்டும் பேசாமல் நிரூபித்தே காட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாருக்காக அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்  …
( டிஸ்கி : நான் ரஜினி யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் , நடிகராகவும் மதிக்கிறேன்

ஆனால் ஒரு விமர்சகனாக அவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் பாராட்ட வேண்டுமென்பதில்லை .

இது புரியாதவர்கள் சுற்றும் கம்புக்கு நிர்வாகம் பொறுப்பல்ல )

ரேட்டிங் : 2.5 * / 5 * ஸ்கோர் கார்ட் : 41 

  • அனந்து (வாங்க ப்ளாக்கலாம் அனந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe