விக்டோரியா நினைவு இல்லம் ஜான்ஸி ராணி லட்சுமிபாய் பெயரில் மாற்றப்பட வேண்டும்: சு.சுவாமி!

சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
modi vivekanandajayanthi1 - 2026

கோல்கத்தா துறைமுகத்தின் பெயர் மாற்றம் செய்யப் பட்ட பின்னர், அடுத்த கோரிக்கையாக, விக்டோரியா நினைவு கட்டடத்துக்கு ஜான்சி ராணி லட்சுமி பாயி பெயர் மாற்றப் பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது பாஜக.,

ஒரு ட்வீட்டில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள போது… “வரலாறு, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கோல்கத்தாவில் மோடி கூறியதை நான் வரவேற்கிறேன். விக்டோரியா மெமோரியலை ராணி ஜான்சி ஸ்மாரக் மஹால் என்று மறுபெயரிடுவதன் மூலம் அவர் அந்த வார்த்தையை செயல்படுத்த முடியும். 1857 இல் ராணி ஜான்சி லட்சுமி பாயி காட்டிக் கொடுக்கப்பட்ட பின்னர் விக்டோரியா மகாராணி இந்தியாவை 90 ஆண்டுகளாக சூறையாடினார் என்பது குறிப்பிடத் தக்கது. .

சியாம பிரசாத் முகர்ஜியின் பெயரால் கொல்கத்தா துறைமுகத்தின் பெயர் மாற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

“இந்த துறைமுகம் இப்போது சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என்று அழைக்கப்படும்” என்று பிரதமர் மேலும் கூறினார்! “சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்த பின்னர், அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாமல் இருந்ததால் அது நாட்டிற்கு துரதிர்ஷ்டவசமாகிவிட்டது. “

“கொல்கத்தா துறைமுகம் இந்தியாவின் தொழில்துறை, ஆன்மீகம் மற்றும் சுய சுதந்திரத்தின் சின்னமாகும். இந்த துறைமுகம் அதன் 150 வது ஆண்டில் நுழையும் போது, ​​புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடையாளமாக மாற்றுவது முக்கியம்” என்றார் பிரதமர்.

முன்னதாக, வங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். கோல்கட்டா துறைமுக பொறுப்பு கழகத்தின், 150வது ஆண்டு விழாவில் பங்கேற்ற, பிரதமர் மோடி, துறை முகத்துக்கு, ஷ்யாம பிரசாத் முகர்ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தொடர்ந்து துறைமுக விழாவை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள ஏழை மக்கள், தலித் ஆகியோரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு திட்டம் தீட்டியும், அதை செயல்படுத்த முடியவில்லை. மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், மாநில அரசுக்கு ஆர்வம் இல்லை. மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள், சம்பந்தப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கின்றன. இதில், இடைத்தரகர் யாரும் இல்லை. சிண்டிகேட் இல்லை. மக்களின் பணத்தை இடையில் உள்ளவர்கள் சுரண்ட முடியாது. ஆனால், இப்படிப்பட்ட திட்டங்களுக்கு தான், மாநில அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஷ்யாம பிரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனராக இருந்தவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.