தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

Published:

p ravindranath - 2026

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது இதுகுறித்து அந்த அமைப்பு சார்பில் அதன் மாநில செயலாளர் கா குற்றாலநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில் ….

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்று நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களின் வாகனம் சில இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடு சாலையில் மறிக்கப்பட்டு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்து முன்னணி பேரியக்கம் இதனை வன்மையாக கண்டிக்கிறது .

அத்தனை காவல் பாதுகாப்புகளையும் மீறி பயங்கரவாதிகள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தை மறித்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது. களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பது ஆபத்தானது. இது தமிழக மக்கள் மட்டுமல்ல தேசத்தின் பொதுமக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் ஆகும். ஆகவே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கைது செய்து அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசும் தமிழக காவல்துறையும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது… என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img