இன்று (பிப்.4) உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்!

சற்றுமுன்
cancer day - 2026

இன்று (பிப்ரவரி 4) உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம்

உலக புற்றுநோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப் படுகின்றன. உலக புற்றுநோய் தினம் உலகில் உள்ள அனைத்து மக்களையும் புற்றுநோய்க்கு எதிராக போராட ஒன்றிணைக்கிறது.

இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்பு உணர்வினை ஏற்படுத்தல், நோய் பற்றிய கல்வியை வழங்குதல் மற்றும் அரசாங்கங்களுக்கும் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நோய் தடுப்பு பற்றிய அழுத்தங்களை அளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இந்த தினத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதிலும் ஊடகங்கள் மத்தியிலும் புற்றுநோய் பற்றிய தெளிவினையும், விளக்கத்தினையும் ஏற்படுத்தவும் புற்றுநோய் பற்றியும் நோய்தடுப்பு பற்றிய விழிப்புணர்வுச் செய்திகளையும் தகவல்களையும் பரப்பவும் சிறந்த வாய்ப்பாக இந்த தினம் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறது.

தற்போது 82 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். அதிலும் 40 லட்சம் பேர் உரிய வயது (30 தொடக்கம் 69 வயது) அடையும் முன்பே மரணம் அடைகின்றனர். புற்றுநோய் அனைவரையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றது.

cancer cure - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.