பெற்றோர் பணத்தை உறிஞ்சும் இந்திய மாணவர்கள்… போராட தகுதியில்லாதவர்கள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
udhayanidhi stalin - 2026

அமெரிக்க, ஐரோப்பிய மாணவர்கள் …15 வயது ஆன நாளில் இருந்து சிறு சிறு வேலைகளை செய்து உழைப்பின் அருமையையும், பணம் சம்பாதிக்கும் பொறுப்பையும் உணர்கிறார்கள். தங்களின் அன்றாட செலவுக்கு பெற்றோரை சார்ந்து நிற்பதில்லை. பெற்றோரை …பணம் சம்பாதித்து தரும் கருவிகளாக பயன்படுத்துவதில்லை.

தங்களுடைய மேல் படிப்புக்கு தேவைப்படும் பணத்தை தானே உழைத்து சம்பாதித்து சேர்த்துக் கொண்டு ..அதன் பின்னரே மேல் படிப்பை தொடர்கிறவர்கள் அதிகம்.

அதனால்…சுயம் அறிந்த இத்தகைய மாணவர்களுக்கு புரட்சி பேசவும், விரும்பினால் போராட்டம் நடத்தவும் தகுதி உண்டு.

இந்தியாவில்..போராட்டம் என்றும், புரட்சி என்றும் சுற்றிக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்களில் எத்தனை பேர்.. பெற்றோரை சார்ந்திருக்காமல்..தங்கள் உழைப்பில் சம்பாதித்து படிப்பவர்கள் ? எத்தனை பேர் சிறு சிறு வேலைகளை செய்து அன்றாட செலவுகளுக்கு சுயமாக சம்பாதிப்பவர்கள் ?

பெற்றோரின் உழைப்பையும், பணத்தையும் சுரண்டி தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் சுயமற்ற மாணவனுக்கு புரட்சி பேசவும், போராட்டம் செய்யவும் எந்த தகுதியும் இல்லை …

  • பானு கோம்ஸ் (சமூக சிந்தனையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.