இன்று அதிகரித்து விட்ட செக்ஸ் காட்சிகள்.. அன்று இலை மறை காயாய் காட்டினோம்..! பாரதிராஜா!

Published:

bharathi raja 1 - 2026

முதல் மரியாதை படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்த பாரதிராஜா, தற்போது மீண்டும் ஒரு மரியாதை படத்தை இயக்கி உள்ளார்.

அதன் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தான் இயக்க இருந்ததாக முதல் பாக பேட்டியில் தெரிவித்திருந்த பாரதிராஜா, இரண்டாவது பாகத்தில் இன்றைய சினிமாவில் செக்ஸ் காட்சிகள் ஆபாசமாக, கவுச்சியாக எடுக்கப் படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

bharathi raja - 2026

பூக்களை உரசியும், பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும், அப்போது படுக்கையறை காட்சிகளை எடுத்தோம். ஆனால், தற்போது, நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் சென்சார் இன்றி, மொத்த ஆபாசத்தையும் காட்டி வருவதால், புதிய படங்களை இயக்கும் இயக்குநர்களும், அதிக அளவிலான ஆபாச காட்சிகளை படத்தில் எடுத்து வருகின்றனர்.

லிப் லாக் போன்ற காட்சிகள் எல்லாம் தற்போது, எல்லா படங்களிலும் சர்வ சாதாரணமாக வருகின்றன. சினிமா படங்களில் செக்ஸ் காட்சிகள் அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

bharathi raja 2 - 2026

, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடன் நடத்திய விவாதத்தில், சேலையை சற்று முழங்கால் வரை தூக்கிக் காட்டினாலே அது ஆபாசம் தான் என்று தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img