
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வானமாமலை. ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் வேலையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்.
கருணை அடிப்படையில் அந்த வேலை அவரது இளைய மகன் அகிலன் என்பவருக்கு கிடைத்தது. இப்போது அகிலன் வயசு 50 ஆகிறது. விருதுநகரில் ரெயில்வே ஊழியராக வேலை செய்து வந்தார். ஆனால் அகிலனுக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
4 முறை கல்யாணம் ஆயிடுச்சாம். நாலுமே விவாகரத்தும் ஆயிடுச்சாம். அடிக்கடி மனரீதியாக அகிலன் பாதிக்கப்பட்டதால், அவரை வேலையில் இருந்தும் நீக்கிவிட்டனர்.
அதனால் அகிலன் தன்னுடைய அம்மா விமலாவுடன் விருதுநகரிலேயே வசித்து வந்தார். பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் விமலாவுக்கு சொந்தமாக அடுத்தடுத்து 4 வீடுகள் இருக்கின்றன.
எல்லா வீட்டையும் விமலா வாடகைக்கு விட்டிருக்கிறார்.. வாடகை வசூல் செய்ய மட்டும் தாயும் – மகனும் அடிக்கடி பாளையங்கோட்டை வருவார்கள்.
அப்படி வரும்போது, இங்குள்ள ஒரு வீட்டில் தங்குவார்கள். வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகை வாங்க அகிலனும், விமலாவும் வந்தனர். ஆனால் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து நாற்றம் அடித்தது.
ரத்த வெள்ளம்அக்கம் பக்கத்தினரால் இருக்கவே முடியல.. அதனால் அகிலன் வீட்டை எட்டி பார்த்தனர். விமலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
பக்கத்திலேயே ஒரு இரும்பு கம்பி கிடந்தது… அம்மாவின் சடலம் பக்கத்தில் அகிலன் உட்கார்ந்திருந்தார். இந்த காட்சியை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.
விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதுடன் அகிலனை பிடித்து விசாரணை நடத்தினர். அகிலன் சொன்ன பல திடுக் தகவல்களை கேட்டு காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர்.
வாடகை வசூல் செய்துவிட்டு வீட்டில் இருந்தபோது, அகிலனுக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தில் தான் அகிலன், விமலாவை இரும்பு கம்பியால் அடித்ததாக கூறப்படுகிறது. விமலா இறந்து 2 நாள் ஆகியும், சடலம் பக்கத்திலேயே அகிலன் உட்காரந்திருக்கிறார்.
பூட்டிய கதவில் இருந்து நாற்றம் வெளியே வந்து அக்கம் பக்கத்தினர் வரும்வரை அகிலன் நகரவே இல்லை. அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொல்லும்போது, அகிலன் கையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தபடியே இருந்திருக்கிறது.
இப்போது கைது செய்யப்பட்ட அகிலனை காவல்துறை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை தந்துள்ளது.