காணும் பெண்ணை எல்லாம் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் கான்! மும்பை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
mumbai - 2026

மும்பையில் மதுங்கா ரெயில் நிலையம் உள்ளது.. இங்குள்ள பாலம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில்தான் இந்த காட்சியை கண்டனர்.

ஜனவரி 25-ம் தேதியன்று ஒரு இளைஞர் அந்த பக்கமாக செல்லும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் தருவதை கண்டு அதிர்ந்தனர்.. பேன்ட்-சட்டை போட்டுள்ளார்.. தாடி வைத்திருக்கிறார்.. பார்ப்பதற்கு டீசன்ட்டாக இருக்கிறார்.

எதிரே யார் வருகிறார்கள், போகிறார்கள் என்றே தெரியாமல் செல்போனை நோண்டிக் கொண்டே வரும் பெண்களைதான் இந்த இளைஞர் குறி வைக்கிறார். தலைகுனிந்து போனையே நோண்டி வரும் பெண்களின் பின்னாடியே போகிறார்.. அவர்களை ஒரு இடி இடிக்கிறார். பிறகு முத்தம் தந்துவிட்டு தப்பி ஓடிவிடுகிறார்.

அந்த நபரின் அடையாளத்தை வைத்து காவல்துறை கைது செய்துவிட்டனர். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அந்த நபர் பெயர் கான். மறுநாளே அதாவது ஜனவரி 26-.ம் தேதியே அவர் மீது வழக்கு பதிந்து விட்டனர் பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட குற்றத்திற்காக அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த நபருக்கு பிக் பாக்கெட் அடிப்பது என்றால் உயிராம்.

அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் ஜெயிலுக்கு போயுள்ளார்.. இப்போது ஜாமீனில் இருந்தாலும், பாலியல் வழக்கில் கைதாகி உள்ளார். யார் எல்லாம் இந்த இளைஞரால் பாதிக்கப்பட்ட அந்த பெண்களை அழைத்து கானை அடையாளம் காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.