
தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பரபரப்புக்காக ஏதாவது விவகாரங்களில் சிக்கிக் கொண்டு டிஆர்பி ரேட் ஏற்றுவது இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களின் வழக்கம்.
இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களை நாய்கள் எனக்கு ஒரு நடிகை சாக்ஷி குறிப்பிட்டது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களில் முடிந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. பலநேரங்களில் நிகழ்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கருதும் நேரத்தில் ஏதாவது சர்ச்சைகளை உருவாக்கி நிகழ்ச்சியை ஓட்டி வருகின்றனர்.
கமலஹாசன் எதிராகவே புகார்கள் பல வந்துள்ளன. அண்மையில் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் கமலஹாசன் மீதும் புகார் தெரிவித்தார்

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியும் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார் இந்த நிலையில் நடிகரின் தர்ஷன் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகை வனிதா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

இதனால் வனிதாவுக்கும் நடிகைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது சரி நடிகை சாக்ஷி சமாதானம் செய்தார். அப்போது நாய்கள் ரோட்டில் குரைக்கும் அதற்காக நீ கவலைப்படாதே நான் பொதுமக்களைத் தான் சொல்கிறேன். அவர்கள் குறைத்தால் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

சாக்ஷியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள் இதற்காக தனி டேக் உருவாக்கி சாட்சியை முடிந்த அளவுக்கு வசைபாடி வருகின்றனர்!



