
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அறிவில்லையா என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சுந்தரவள்ளி கேள்வி எழுப்பி வீடியோ பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்து, பலரும் ஆச்சரியப் படுகின்றனர். காரணம், இதுநாள் வரை மோடி, பாஜக., குறித்துதான் இது போன்ற தரம்கெட்ட விமர்சனங்களைச் செய்து வந்தார். அப்போதெல்லாம் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. அது போல் இப்போதும் சாய்ஸில் விட்டுவிடுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவராக இருப்பவர் சுந்தரவள்ளி. இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.
நாங்கள் உறுதியாக சொல்கிறோம். தமிழக அரசு உடனடியாக இதற்கு எதிரான வேலைகளில் இறங்க வேண்டிய தேவை இருக்கிறது. குறைந்த பட்சம் மக்கள் ஒன்ன புரிஞ்சுக்கோங்க. என்னைக்கும் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் நமக்கானவர்கள் இல்லை. எந்தக் கேள்வி கேட்டாலும், இங்கிருக்கிற முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. உங்களுக்கு அறிவே இல்லையாய்யா..? இங்கிருக்கிற முஸ்லிம்களுக்கு எதுக்கு பாதிப்பு வரப்போகுது? நாங்கள் பேசுவுது எல்லாம் புலம்பெயர்ந்து வருகிற முஸ்லிம்களை பற்றி. .. என்று வீராவேசமாகப் பேசியுள்ளார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வரை பார்த்து அறிவில்லையா என சுந்தரவள்ளி பேசியதற்கு அவர்கள் இருவரைத் தவிர மற்ற சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சுந்தரவள்ளி உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் என்றும், இப்போது நடைபெறும் போராட்டங்கள் இந்திய முஸ்லிம்களுக்கானது இல்லை, புலம் பெயர் முஸ்லிம்கள் என்ற பெயரில் நாட்டுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்காகத்தான் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளைக் கண்டறிந்து, அவர்களை வெளியேற்றுவதற்காகவே, குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ.,வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய முஸ்லிம்களிடம் இருந்து வெளிநாட்டு பயங்கரவாதிகளை தனித்து அடையாளம் கண்டு, இந்திய முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வந்துள்ள சிஏஏ சட்டத்தை, அதே பயங்கரவாதிகளிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, இங்கே பணப்பட்டுவாடாவை நடத்தி போராட்டங்களை நிர்வகித்து வருகிறார் சுந்தரவள்ளி என்று தேசியப் புலனாய்வு முகமைக்கு பலர் ஆதாரங்களுடன் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.