கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு!

Published:

kovilpatti
kovilpatti

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது, தென்னகத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி, புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் தரப்பில், புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

kovilpatti kadalamuttai
kovilpatti kadalamuttai

இதை ஏற்றுக் கொண்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மக்களிடம் அதிகம் கலந்துவிட்ட கோவில்பட்டி கடலைமிட்டாய், இந்தப் பகுதிகளைக் கடந்து தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளுக்கும் வியாபார ரீதியாக சென்றடைந்துள்ளது.

குடிசைத் தொழிலைப் போல், கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிப்புத் தொழில் இருப்பதால், இந்தப் பகுதி வழியே ரயில் பஸ் என பயணம் செல்லும் எவராயினும் கடலைமிட்டாய் வாங்கிக் கொண்டு செல்வது மதிப்புக்குரிய ஒன்றாக பார்க்கப் படுகிறது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img