மதுரை கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai battars
madurai battars

மதுரை கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது !

கொரோனா தொற்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவரின் தாய் உயிழந்ததை அடுத்து, திருக்கோயில் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்,எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகரின் 70 வயது தாயார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது மகன், அவருடன் தொடர்பில் இருந்த அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உட்பட 110 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

madurai archakas
madurai archakas

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.