
தாயை இழந்து தனித்து விடப்பட்ட சிறுமிகளுக்கு உதவிய சேவாபாரதி அமைப்பு, அவர்களின் எதிர்காலக் கல்விக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.
நேற்று நாளிதழ் ஒன்றில் ’கேள்விக்குறியாகி இருக்கும் வருங்காலம் தனிமரமாய் நிற்கும் பள்ளி சிறுமிகள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் திருத்தணியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளின் தாயார் இரு தினங்களுக்கு முன் திடீரென காலமாகி விட்டதாகவும், அவர் தந்தை பல ஆண்டுகள் முன் எங்கே சென்று விட்டதாகவும் இப்போது அனாதையாக நிற்கும் சிறுமிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
இதைப் பார்த்து விட்டு, உடனடியாக திருத்தணியில் இருக்கும் சேவாபாரதி பொறுப்பாளர் முனுசாமி நேற்று அந்தச் சிறுமிகளை சந்தித்து, அவர்களுக்கு உடனடியாக மளிகைப் பொருட்கள் வழங்கியிருக்கிறார். அந்த சிறுமிகள் விரும்பினால் சேவாபாரதி நடத்தும் பெண்கள் அன்பு இல்லத்தில் அவர்களைச் சேர்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.