
மதுரை: பார்சல் டீ மட்டும் விற்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. விதியை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப் படுகிறது!
மதுரை நகரில் பல இடங்களில் செயல்பட்டு வரும் டீக்கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்திருப்பதால், பார்சல் டீயும் கடையின் வாசலிலே, பொது மக்களை நிறுத்தி வழங்கப்படுகிறது.
மதுரையில் அனைத்துக் கடைகளிலும் பொது மக்கள் கடைக்குள் புகுந்து விடாமல் இருக்க கடை நிர்வாகம், கடையின் வாசலிலேயே தடுப்புக்களை ஏற்படுத்தி, பணத்தைப் பெற்றுக் கொண்டு பார்சல் டீ மற்றும் காப்பி போன்றவற்றை பாத்திரங்களில் கடைக்காரர்களே வந்து வழங்கி வருகின்றனர். அவ்வாறு பார்சல் வாங்கும் தேநீரை பொதுமக்கள் கடை வாசலில் நின்று அருந்த கட்டாயம் அனுமதிப்பதில்லை.
அதே நேரம், சோழவந்தான், செக்கானூரனி, தேனூர், தென்கரை, முள்ளிப்பள்ளம், பேரையூர், கல்லுப்பட்டி, திருவாதவூர், திருவேடகம், கருப்பட்டி, இரும்பாடி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், ஊர்மெச்சிக்குளம், சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் தேநீரை பொதுமக்கள் வாங்கி கூட்டம் போடாமல், கடையை விட்டு தள்ளி நின்று அருந்த அனுமதிக்கின்றனர். மதுரை மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்வதால், டீக்கடையின் உரிமையாளர்கள் பார்சலை கையில் கொடுத்து கடையின் வாசலோடு அனுப்பி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி காவல் நிலையம் அருகே கடையில் டீ குடிக்க பொதுமக்களை கடையின் உரிமையாளர் அனுமதித்ததால், அந்தக் கடைக்கு வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை