ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் க்ஷேத்திரத்தில் உரையாற்றிய பிரம்மஸ்ரீ சாம வேதம் ஷண்முக சர்மா ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஸ்ரீ சைலம் புண்ணிய தலத்தில் உள்ள எஸ்பீ காலனியைச் சேர்ந்த சுமார் நூறு கிறிஸ்தவர்கள் மீண்டும் ஹிந்து மதத்தில் சேர்ந்தார்கள். ஸ்ரீ அருந்ததி சமேத வசிஷ்டர் கோவில் டிரஸ்ட் சேர்மன் தர்சனபு ஸ்ரீனிவாஸ் தலைமையில் உள்ளூர் எஸ்பீ காலனி மகிளா சங்கத் தலைவி சவம்மா, அங்கையா, காசையா மற்றும் பலர் அக்டோபர் 2ம் தேதி 2018 செய்வ்வாயன்று மதியம் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா அவர்களின் முன்னிலையில் தாய் மதமான இந்து மதத்திற்குத் திரும்பினார்கள்.
அவர்களுக்கு ஓம்நமச்சிவாய என்ற முத்திரையுள்ள துண்டு, பாக்கெட் சைஸ் பகவத் கீதை புத்தகம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக தேவஸ்தானம் உதவி கமிஷனர் மஹேஸ்வர ரெட்டி, பி ஆர் ஓ ஸ்ரீனிவாச ராவ் முதலானோர் வருகை தந்தனர்.
அதே போல் உள்ளூர் எஸ்பீ காலனியைச் சேர்ந்த குழந்தைகள் நல்ல கல்வி அறிவு பெற வேண்டும் என்ற ஆசிகளோடு அவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
செய்தி: – ராஜி ரகுநாதன்



ஆந்திர மாநிலம் 
சநà¯à®¤à¯‹à®·à®®à®¾à®© செயà¯à®¤à®¿, இதைபà¯à®ªà¯‹à®² இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®©à¯ அனைதà¯à®¤à¯ இடஙà¯à®•ளிலà¯à®®à¯ நம௠தாய௠மதமான ஹிநà¯à®¤à¯ மததà¯à®¤à¯à®•à¯à®•௠மீணà¯à®Ÿà¯à®®à¯ வர வேணà¯à®Ÿà¯à®®à¯.