தாமிரபரணி மஹா புஷ்கர் நடைபெறும் இத்தருணத்தில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் வரும் இவ் வேளையில் திருநெல்வேலி உடையார்பட்டி, கைலாசபுரம், மீனாட்சிபுரம், குறுக்குதுறை ஆற்றுக்கு செல்லும் சாலை தோண்டி போடப் பட்டுள்ளது.
சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளிக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை! நெல்லை மாநகராட்சி நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மக்களை துன்பத்தில் ஆழ்த்தவா இவ்வாறு பள்ளம் நோண்டிப் போட்டுள்ளது?! எனவே மக்களின் சிரமம் உணர்ந்து, இப்பணியை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
– அ. முத்துராமன்





