கொரோனா: தமிழகத்தில் இன்று புதிய பாதிப்பு 580; சென்னையில் மட்டும் 316..!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilnaducorona
tamilnaducorona

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா உறுதி… செய்யப் பட்டிருக்கிறது. மொத்த பாதிப்பு 5409 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று இருவர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு 37 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 316 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. பாதிப்பு 2644 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 3822 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இன்று மட்டும் 580 பேருக்கு குறைவான பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,450. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 410 பேர் ஆண்கள், 170 பேர் பெண்கள். இன்று வரையில் பாதிக்கப் பட்டவர்களில், 3730 பேர் ஆண்கள்; 1677 பெண்கள்; இரண்டு பேர் திருநங்கையர்.

இன்று மட்டும் 14 ஆயிரத்து 195 நபர்களுக்கு சோதிக்கப்பட்டது. இதுவரையில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 14 ஆயிரத்து 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 31 பேர் கொரானா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 1547 பேர் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று வெளியான சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இருவர் உயிரிழந்ததால் இதுவரையிலான உயிரிழப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.