
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெண் டாக்டர் தனது கணவர் மற்றும் சகோதரி குடும்பத்தினர் என மொத்தம் 6 பேருடன் சென்னிமலை அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் வந்தார்.இவர்களில் பெண் டாக்டரின் கணவரின் சகோதரிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பெண் டாக்டர் குடும்பம், அவரது தாய் என 7 பேர் தனிமைப்படுத்தபட்டனர். இது தவிர இவர்கள் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் தனிமைப் படுத்தபட்டு உள்ளனர்.