
தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு நிதி வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிதி வழங்கினார்! விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் வரவேற்றார். விழாவில் மாவட்ட கலெக்டர் டி. ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இந்த கொரானா வல்லரசு நாடுகளையே பயமுறுத்தி கொண்டிருக்கிறது. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதனை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கூட்டுறவு துறை சார்பில் விலையில்லா அரிசி, இலவச பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், அரிசி போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், அரிசி விலையை உயர்த்த விடாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.,
ஸ்டாலின் ஒன்றிணைவோம் என புகார் மனு பெற்றார். ஆனால் ஒரு மனு கூட இந்த கூட்டுறவுத் துறை குறித்து எந்த புகாரும் வராதது எங்களுக்கு கிடைத்த வெற்றி.
தனியார் நகைக் கடைகளில் நகையை அடகு வைத்தால் திரும்பி வராது. எனவே மக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவுத் துறை மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொரானா சிறப்பு கடனுதவியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 3225 குழுக்களுக்கு 24.84 கோடி ரூபாய் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது .மதுரை மாவட்டத்தில், 2 கோடியே 80 ஆயிரம் மதிப்பில் கொரானா கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை