மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை!

கிரைம் நியூஸ் தமிழகம்
nurse

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிலுவம்பட்டியைச் சேர்ந்த பிரியதர்ஷினி 22 என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களாக மிகுந்த மனஉளைச்சலுடன் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்த அவர் இரவு 9.30 மணிக்கு திடீரென மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காதல் தோல்வியால் செவிலியர் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.