வங்கிக்கடன் பெற உதவும் வகையில்… பாஜக இணையதளம் தொடக்கம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
bjp in

வங்கிக்கடன் பெற பாஜக புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது.

வங்கி கடன் உதவும் தாமரை என்ற ஒரு அமைப்பை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில பொருளாளர் திரு எஸ் ஆர் சேகர் அவர்களின் தலைமையில் உருவாக்கியுள்ளது. இதில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் போடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் எப்படி கடன் பெறுவது என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை உங்களுக்கு உதவி எடுத்துக்கூறி வழி நடத்துவதாகும்.

வங்கியில் கடன் வாங்க விரும்புவோர் அதற்கான வழி காட்டுதல் வேண்டும் என்றால் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள். செய்தபின் Login செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும். எங்கள் நிர்வாகி உங்களை தொடர்புகொண்டு உதவுவார்கள்…. என்று அந்த இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் ஆத்மநிர்பர் பாரத் பிரசாரம் – சுயசார்பு பாரதம்.. என்ற திட்டத்தின் அம்சத்தை இதில் விளம்பரப் படுத்தியுள்ளனர்.

bjpin
bjpin

இந்தியா தற்சார்புடன் எழுந்து நிற்க ஐந்து தூண்கள் அவசியம் அவை பொருளாதாரம் உள்கட்டமைப்பு மக்கள்தொகை அமைப்பு முறை மற்றும் தேவை.

உள்ளூர் சந்தைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களே பின்னாளில் பெரு நிறுவனர்கள் ஆக மாறியதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பல்வேறு துறையினரோடு ஆலோசனை நடத்திய பின்னர் சுயசார்பு பாரதம் என்ற தலைப்பில் தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்… என்று தெரிவிக்கும் இந்தத் தளத்தில், இந்த உதவி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளது.

மத்திய அரசு தொழில் துவங்க வீடு கட்ட கல்வி கற்க என அனைத்திற்கும் வங்கி கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிப்போருக்கு உதவுவதற்காக தமிழக பா.ஜ.வில் ‘வங்கிக் கடன் கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்; மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இக்கமிட்டி சார்பில் வங்கி கடன் பெறுவோருக்கு உதவி செய்வதற்காக ‘வங்கி கடன் உதவும் தாமரை திட்டம்’ என்ற பெயரில் www.tnbjp.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இ ணையதளத்தை தமிழக பா.ஜ. தலைவர் முருகன் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இணையதளத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு கடன்கள் குறித்த விபரம்; கடன் பெறுவதற்கான தகுதிகள்; வங்கி கேட்கும் ஆவணங்கள்; எந்த திட்டத்தில் எவ்வளவு கடன் வழங்கப்படுகிறது என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன. வங்கியில் கடன் பெற விரும்புவோர் இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ. நிர்வாகிகள் நேரில் சென்று உதவி செய்வர்.

மேலும் வங்கி கடன் பெற ஆலோசனைகள் வழங்க கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைய உதவுவதற்காக ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்கள் எட்டு பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற வங்கி மேலாண் இயக்குனர் ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதாரண மக்களும் கடன் பெற்று தொழில் துவங்க உதவுவதே எங்கள் நோக்கம் என பா.ஜ. மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கிக் கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ. சார்பில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

4 thoughts on “வங்கிக்கடன் பெற உதவும் வகையில்… பாஜக இணையதளம் தொடக்கம்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.