சுவையான தக்காளி சின்ன வெங்காய தொக்கு!

Published:

tomato onion thokku

தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

தேவையானவை:
பழுத்த தக்காளி – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – 150 கிராம்,
மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 8 பல்,
புளி விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
சோம்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கப்.

செய்முறை:

தக்காளியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுது, புளி விழுதை சேருங்கள்.

மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி, தக்காளி சாறு சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து சுருள வரும் வரை கிளறி இறக்குங்கள். சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்! குறிப்பு: பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கியும் போடலாம்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img