
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பன்குளம் கிராமத்தில் சொந்த பட்டா இடத்தில் கட்டப்பட்டிருந்த பச்சைசாத்தி மாடன் கோவிலையும், அருகிலுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வழிபட்டுவந்த அழிப்பாச்சிமாடன் கோவிலையும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்து மக்களை மிரட்டி ஒடுக்கி இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இது சட்ட விரோத இடிப்பு என்று அம்மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை கோட்டத் தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இரண்டு கோவில்களுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.
முஸ்லிம்களுடைய தூண்டுதலின் பெயரில் வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டு இந்து கோவில்களை இடித்து சூறையாடி உள்ளது தெரியவருகிறது என்று அவர்கள் இந்த ஆய்வின் போது தெரிவித்தனர்.

மேலும், இடிக்கப்பட்ட கோயில்கள் குறித்து தெரிவிக்கையில், வருகிற ஜூன் 21-ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இரண்டு கோவில்களையும் மீண்டும் பழைய நிலையில் கட்டி தரவேண்டும் தவறினால், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்து விரோத போக்கினை கண்டித்து, ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு, இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்… என்று தெரிவித்தனர்.
அழகப்பபுரம் அடுத்து சம்பன்குளம்… ஏன் நாளை உங்கள் கிராமமாகக் கூட இருக்கலாம் ! தென்காசி மாவட்ட இந்து சமுதாய பெருமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்வர வேண்டும் என்றும்,
இஸ்லாமியர்களின் கைப்பாவையாக செயல்படும் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் அப்போது தெரிவித்தனர்.