தொற்று பரவாது.. மலட்டு தன்மை நீக்கும்.. நாவற்பழம் தரும் நன்மைகள் அறிவோம்!

Published:

navar pazham

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நாவல் பழத்தின் விதையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் வீதம் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாத விடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை நிவர்த்தி செய்ய நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.

“மழைக்காலத்தில் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் அதிகமுள்ள வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.” என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சு சூத் தெரிவித்தார். எனவே, ஆரோக்கியமான பழ வகையான நாவற்பழங்கள் மழைக்காலத்திற்கு ஏற்றதாக உள்ளது

நாவல் மரத்தின் தளிர் இலைகளை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

பெண்களின் மலட்டுத் தன்மை நீங்க வைட்டமீன் ஈ தேவை நாவற் இலையை சாற்றாக்கி கஷாயமாக்கி தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்துக் கட்டித் தயிருடன் கலந்து விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர பிள்ளை வரம் கிடைக்கும்

Related articles

Recent articles

spot_img