சுஷாந்த் சிங் இறப்புக்கு பீலா ராஜேஷ் இரங்கல்!

சற்றுமுன் தமிழகம்
beela rajesh 1

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மனஅழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

34 வயதான இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் சுயசரிதை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இந்த அதிர்ச்சி முடிவு பற்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் உருக்கமாகப் பேசி வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பேரிழப்பு என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரணத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிர்த்தி இராணி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் வீரர் ஷிகார் தவான் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த்தின் மறைவுக்கு பீலா ராஜேஷ் ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், திறமையான இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.