சென்னையில் இருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று!

சற்றுமுன் மதுரை
madurai rajaji hospital
madurai rajaji hospital

சோழவந்தான் அருகே சென்னையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோணா தொற்றுநோய் கண்டறியப்பட்டது 

சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் குடும்பத்தினர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர் சென்னையில் தற்போது கொரோணா தொற்றுநோய் பரவலாக பரவிவருகிறது இதனால் அங்கு உள்ளவர்கள் தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர் 

இவர்களில் காடுபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காடுபட்டி கிராமத்திற்கு தன் குடும்பத்துடன் வந்து இருக்கிறார் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் தகவல் கிடைத்து சுகாதார துறை ஆய்வாளர்  ராதாகிருஷ்ணன்  மற்றும் காவல் துறையுடன் சேர்ந்து சீனிவாசன் மற்றும் அவர் குடும்பத்தினரை பாண்டியராஜபுரம் செக்போஸ்டில் ரத்தமாதிரி பரிசோதனை செய்தனர்

பின்னர் இவர்கள் 5 பேரும் காடுபட்டியில் தனிமைப்படுத்த பட்டனர் இதில் குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோணா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு இவர்கள் மூன்று பேரையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோணா பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.