உயிரிழப்புகள் அதிகரித்தும்… கோரிப்பாளையத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாட்டம்!

Published:

madurai gorippalayam
madurai gorippalayam

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே முகக் கவசம், தலைக்கவசம் இன்றி, காரணமின்றி இரு சக்கர வாகனத்தில் நடமாடிய பலரை மடக்கி பிடித்தனர். பலர் போலீஸாரிடம் காரணங்கள் சொல்லியும் கூட,  அவர்களிடமிருந்து அபராதம் வசூலித்ததுடன், கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர்.

மதுரை நகரில் ஓரே நாளில் பத்து பேர் இறந்ததால், மதுரை அண்ணாபஸ் நிலையம் அருகே உள்ள கொரோனா வார்டில் அருகே சாலையில் மக்கள் அச்சமின்றி நடமாடினர்.

இதனிடையே, மதுரை நகரில் மாட்டுத்தாவணி அருகே செயல்படும் தொழிற்பேட்டையில் சில ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மறைமுக செக் வைத்துள்ளதாக தொழிலாளர்கள் பலர் புலம்புகின்றனர்.

தொழிற்பேட்டையில் சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அலையவிடாமல் தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கியுள்ளதாம்.

இங்குள்ள சில நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிக்கு தினசரி வாகனம் இல்லாமலும், போலீஸாரிடம் அடையாள அட்டை காண்பிக்காமல், வீட்டிலிருந்தே பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராத தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக ரகசிய உத்தரவு போட்டுள்ளார்களாம்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

வாகனத்தில் பணிக்கு வந்து போலீஸிடம் சிக்கிக் கொண்டால், நிறுவனத்துக்கு பணிக்கு வந்ததை சொல்லக்கூடாது எனவும், தொழிலாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், பல தொழிலாளர்கள் நிர்வாகமானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என, புலம்புவதை கேட்க முடிந்தது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img