மதுரையில் கொரோனா உயிரிழப்பு 19 ஆக உயர்வு!

Published:

madurai rajaji hospital
madurai rajaji hospital

மதுரையில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 116 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று இறந்தவர்களில் பெரும்பாலோர் அறுபது வயதைக் கடந்தவர்கள் என்றும் இவர்கள் சிறுநீரக் கோளாறு மற்றும் மூச்சுத் தினறலால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

நேற்று வரை பத்து பேரும், இன்று மேலும் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்யப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மதுரை செல்லூரில் உள்ள மின்மயனத்தில் இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.

இதனிடையே, மதுரை மாவட்டத்துக்கு 42 காய்ச்சல் பரிசோதனை வாகனங்களை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டதாவது… மதுரை களப்பணி அலுவலர் மருத்துவர் சந்திரமோகன், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் அரசு, அமைச்சர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அளிக்கின்ற தகவலின் பேரில், மருத்துவத்துறை வழிகாட்டுதலின்படி திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் உத்திரவுகள் பிறபித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியம்.

மக்களும், மருத்துவத்துறை அறிவிக்கின்ற அறிவிப்புக்களை தவறாமல் கடைபிடித்தால் தான், இந்த நோயை, ஒழிக்க முடியும் என்றார். இனி, மதுரை மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img