ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர் கோரிக்கை!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
srivilliputhur jeeyar
srivilliputhur jeeyar

தமிழகம் முழுவதும் ஆலயங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கேட்டுக் கொண்டார்..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார். மேலும், தனது முக்கியக் கோரிக்கையாக, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப் பூர தேரோட்ட விழாவை நடத்த அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்… என்று கேட்டுக் கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை, தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல.

எனவே அரசு உடனடியாக கோவில்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இ-பாஸ் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.